Tuesday, August 16, 2016

பிலிபைன்ஸ்


பிலிபைன்ஸ் கடந்த சில வாரங்களாக சர்வதேச அரங்கில் அதிகளவில் பேசப்பட்ட தலைப்பாகும். குறிப்பாக தென் சீனக்கடற்பரப்பு தொடர்பிலான சர்வதேச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு இதற்கான காரணமாகும். இதனை விடவும் மிகவும் முக்கியமாக பிலிபைன்ஸ் அரசாங்கம் மற்றும் அந்நாட்டு முஸ்லிம் கிளர்ச்சிக் குழுவிற்குமிடையிலான சமாதானப்பேச்சுவார்தை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமையாகும்.
அரசாங்கம் மற்றும் கிளர்ச்சி குழுவிற்கிடையிலான பேச்சுவார்த்தை மலேசியாவில் இவ்வாரம் நடைப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதியின் சமாதான முன்னெடுப்பாளர் அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். எனினும் அது மிகவும் கடினமானது என்று தனது கருத்தினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்து. மேலும் அவர் குறிப்பிடும் போது சமாதான செயற்பாடுகளில் இப்பேச்சுவார்த்தை ஒரு மைல் கல்லாகும் என்றார்

பிலிபைன்ஸ்ஸின் வரலாற்றினை பொருத்தமட்டில், தென்பகுதியானது தொடர்ச்சியான வன்முறைகளை சந்தித்து வந்துள்ளது எனலாம். குறிப்பாக முஸ்லிம் பிரிவினைவாதிகள,; மாக்ஸ்வாதிகள், குற்றவியல் அமைப்புக்கள் மற்றும் கலேன் போராளிகள் என பல பிரிவினரின் செல்வாக்கு இப்பகுதியில் காணப்படுகின்றது. இப்பிரச்சினைகள் பெரும்பாலும் மத்திய Mindanao பகுதியிலுள்ள basilan மற்றும் jolo ஆகிய பகுதிகளிலே இடம்பெறுகின்றது.

ஸ்பெயினின் காலநித்துவ நாடான பிலிபைன்ஸினை பொறுத்தமட்டில், முஸ்லீம்கள் குறிப்பிடத்தக்களவு வாழ்கின்ற பகுதியாக Mindanao காணப்படுகின்றது. குறிப்பாக 1968ல் முஸ்லீம் இராணுவ வீரர்கள் இனப்படுக்கொலை செய்யப்பட்டமையினை தொடர்ந்து Jabiadh masscare  , 1970ல் moro national liberation front (mnlf)  எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது பிலிபைன்ஸ் முஸ்லிம்களுக்கு சுதந்திரம் மற்றும் தனி அலகு என்பவற்றினை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது.

1976ல் திரிப்போலியில் mnlf மற்றும் marco நிர்வாகத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் படி  mnlf  சுதந்திரம் என்பதிலிருந்து விலகி சுயாட்சியனை கோரியது. 1984ல்  mnlf  லிருந்து The Moro Islamic liberation front (milf)  விலகி தனியாக செயற்படத்தொடங்கியது. இதன்பின்னர் mnlf மற்றும் அரசாங்கத்திற்கிடையில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரகாரம் Mindanao, Basilan, Sulu, Tawi Tawi and Palawan  ஆகிய பகுதிகளில் சுயாட்சி வழங்குவது தொடர்பிலான ஜனநாயக பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஈட்டப்பட்டது. 
1990ல் பிலிபைன்ஸ் அரசாங்கம் Autonomous Region in Muslim Mindanao ARMM  எனும் நிர்வாக அலகினை உருவாக்கியதுடன் அதனை mnlf மற்றும் milf ஆகிய இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

1991ல mnlf;லிருந்து பிரிந்து Abu Sayyaf  எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு ஏனைய இரு அமைப்புக்களை விடவும் தீவிரமான செயற்பாடுகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்ட்டதுடன், பிற்பாடு அமெரிக்கா இதனை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்க்கவும் தவரவில்லை.

1996ல் Autonomous Region in Muslim Mindanao ARM தொடர்பில் அரசாங்கம் மற்றும்  இடையிலான அடெக்  உடன்பாடு கைச்சாத்திடப்பட்டதுடன், அப்பகுதியின் ஆளுனராகவும் அவ்வமைப்பின் தலைவர் Nur Misuari  நியமிக்கப்பட்டார். 1997ல் milf மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலாக மோதல் தொடங்கியதுடன் 2000ம் ஆண்டு milf யின் பெரிய இராணுவத்தளம் arm forces of the Philippines AFP  யினால் தாக்கப்பட்டதுடன் சுமார் 100,000 மக்களையும் அத்தாக்குதல் இடம்பெயரச்செய்தது. இவ்வாறு  தொடர்ந்து தாக்குதல்கள் நடைப்பெறுவதும் மீண்டும் சமாதானப்பேச்சுவார்த்தைகள் தொடர்வதுமாக பிலிபைன்ஸிலுள்ளது.

No comments:

Post a Comment