Wednesday, August 10, 2016

யெமன்

யெமன்

ஐ.நாவினால் முன்வைக்கப்பட்ட சமாதான உடன்படிக்கையினை யெமன் அரசாங்கம் ஏற்பதாக அறிவித்துள்ளபோதிலும், கிளர்ச்சிக்குழுக்களினால் அது தொடர்பிலான எந்தவொரு கருத்தும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை. சவூதி சார்பான யெமன் அரசினால் ரியாத்தில் முன்னெடுக்கப்பட்ட மாநாட்டில் இவ்வுடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுதொடர்பில் செய்தியினை வெளியிட்டுள்ள சபா செய்தி நிறுவனம் ‘ மாநாட்டில் ஐக்கியநாடுகள் சபையானது ஆயுதமோதலினை முடிவுக்கு கொண்டுவருதல் மற்றும் சனா,டஸாஸ், அல்ஹ{தாயாத் பகுதிகளிலிருந்து கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. எனினும் ஹ_தி அமைப்பானது இக்கோரிக்கையினை ஏற்கமறுத்தமை குறிப்பிடத்தகது.

இவ்வாறான பின்ணனியில் யெமனில் நடைப்பெறுகின்ற உள்நாட்டு ஆயுதப்பேராட்டம் ஒரு முரண்பட்ட நிலைமையினை தோற்றுவித்துள்ளமையினை அவதானிக்கமுடியுமாகின்றது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சிரியா உள்நாட்டு போர் தொடர்பில் அதிகளவில் செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்கள்  யெமன் ஆயுதப்போராட்டம் தொடர்பில் மௌனம் சாதிப்பதாகவே எண்ண வேண்டியுள்ளது.

யெமனின் வரலாற்றினை பொறுத்தமட்டில் உஸ்மானிய சாம்ராஜியத்தின் கீழ் ஆரம்பத்தில் இருந்த நாடு 1967ல் யெமன் மக்கள் குடியரசாக, சவூதி அரேபியாவின் ஆதரவுடன் ஸ்தாபிக்கப்ட்டது.1969ல் மாக்ஸ்வாதிகளினால் தென் பகுதியினது அதிகாரம் கைப்பற்றப்பட்டதுடன், யெமன் மக்கள் ஜனநாயக குடியரசு எனப்பெயரிட்டதுடன், மொஸ்கோ சார் அரசியல்,பொருளாதார மற்றும் வெளிவிவகார உறவுகளை பேணத்தொடங்கியது. கொள்கை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆயிரக்கணக்கானோர் வடக்கினை நோக்கி இடம்பெயறத்தொடங்கினர்.




இரு யெமன்களுக்குமிடையில் யுத்தம் ஏற்பட்டதுடன் அரபுலீக்கின் தலையீட்டால் அவ்வப்போது யுத்தநிறுத்தமும் அமுலில் இருந்தது. 1979ல் ஆட்சிக்கு வந்த அலி அப்துல் சலாஹ் வடயெமனின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படதுடன் 1990 மே மாதாம் இரு யெமன்களும் ஒன்றிணைக்பபட்டு யெமன் குடியரசு எனப்பெயரிடப்பட்து.எனினும் தென்பகுதியானது பொருளாதாரம் மற்றும் அரசியலில் சனாவினால் புறக்கணிக்கபட்டமையினால் 1994 மீண்டும் மோதல் ஏற்படத்தொடங்கியது


யெமனில் தற்போதைய ஆயுதப்போராட்டம் ஜனாதிபதி மன்சூர் ஹதி மற்றும் ~pயா பிரிவின் சாதி மரபினை பின்பற்றும் ஹ_திகளுக்கு இடையில் பிரதானமாக ஏற்பட்டுள்ளது. மன்சூர் ஹதியிற்கு தென்பகுதி சுன்னிகளினது ஆதரவுள்ளதுடன் சவூதி அரேபியாவின் கூட்டணயின் கீழ் 5 வளைகுடா நர்டுகளும், ஜேரர்டான்,எகிப்து,மொரோகோ மற்றும் சூடான் போன்ற நாடுகளது ஆதரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஹ_திகளுக்கு ஈரானின் உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுவதுடன், இப்போராட்டமானது ஈரான் மற்றும் சவூதிக்கிடையிலான பிராந்திய பலம் தொடர்பிலான பலப்பரீட்சையாகவே பார்க்கப்படுகின்றது. யெமனின் அமைவிடமானது எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய இடமாக விளங்குகின்றதுடன் இதனூடாகவே செங்கடல் மற்றும் ஏடன் வளைக்குடாவினூடாக மேற்கொள்ளப்படுகின்ற எண்ணெய் போக்குவரத்து இடம்பெறுவதால், எகிப்து மற்றும் சவூதியினை பொருத்தமட்டில் இப்பகுதியினை ஹ_திகளிடமிருந்து பாதுகாக்கவேண்டிய அவசியம் உள்ளது.


பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய நலன் போன்ற விடயங்களின் கீழ் அமெரிக்கா 2000ம் ஆண்டு முதல் அரசுக்கான உதவிகளை வழங்கிவருவதுடன், 2000ம் ஆண்டு யெமனில் தரித்து வைக்கப்பட்ட அமெரிக்காவின் யுத்த கப்பலான  United States Navy guided-missile destroyer USS Cole (DDG-67) அல்கைதா அமைப்பினரால் தாக்கப்பட்டத்தினை தொடர்ந்து யெமனிற்கான இராணுவ மற்றும் பொலீஸ்களுக்கான உதவிகளை வழங்க தொடங்கியது.
இதேவேளை அல் கைதாவின் கிளையான AQAP யானது தனது சொல்வாக்கினை இங்கு செலுத்தியுள்ளமை முக்கியமான விடயமாகும். அமெரிக்கா ஜனாதிபதி மன்சூர் ஹதியின் ஆதரவுடன் யுஞயுP யிற்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்கின்ற அதேவேலை, AQAPயினை பொறுத்தமட்டில் ஹ_திகளுக்கும் எதிராகவும் தனது செயற்பாடுகளை மேற்கொள்கின்றமை குறிப்பிட்டத்தக்கது

தற்போதைய பிரச்சினையினை பொருத்தமட்டில், ஹ_திகள் அதிகாரத்தினை கைப்பற்றியதுடன், ஜனவரியில் பாராளமன்றத்தினை கலைப்பதாக அறிவித்ததுடன், புதிய இடைக்கால சபை மற்றும் 5 பேர் கொண்ட ஜனாதிபதி சபையினை உருவாக்கி அதனூடாக நாட்டினை இரண்டுவருடங்கள் ஆட்சிசெய்வதாகவும் குறிப்பிட்டனர். எனினும் ஹ_திகளை பொருத்தமட்டில் வடபகுதியினை சேர்ந்த சிறுபான்மையின ~pயாக்கள் என்பதால் அவர்களது பிரகடனம் சுன்னி பிரிவினர்களினாலும், தென்பகுதி தலைவர்களினாலும் புறக்கணிக்கப்பட்டதுடன், குழப்பத்தினை மேலும் அதிகரிக்கச்செய்தது.மேலும் சர்வதேச நாணயநிதியத்தின் தலையீட்டின் காரணமாக மன்சூர் ஹதியின் அரசாங்கம் 2014ல் எரிபொருளுக்கான உதவித்தொகையினை நிறுத்திககொண்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஹ_தி அமைப்பானது, ஐக்கிய நாடுகளினது நிலைமாற்றல் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை வெளியிட்டதுடன், எரிபொருட்களுக்கான விலையினை குறைத்தல் மற்றும் புதிய அரசாங்கம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை மேற்கொள்ளத்தொடங்கியது. இவர்களுடன் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் இணையமைப்பான அல் இஸ்லாவும் கலந்துக்கொண்டனர். ஏடனை ஹ_தி அமைப்பானது கைப்பற்றியதுடன் சவூதியினை மன்சூர் ஹதி நோக்கி தப்பிச்சென்றதுடன், சவுதி அரசு இராணுவரீதியில் வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டு மன்சூர் ஹதியின் ஆட்சியினை மீள ஏற்படுத்த முயற்சியினை மேற்ககொண்டது
.
ஹ_திகளை பொறுத்தமட்டில் ~யா மதப்பிரிவின் ~hதிஸம் எனும் கொள்கையினை பின்பற்றியவர்கள். இவர்கள் மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியனராகவும், இமாமத் கொள்கையின் படி 1000வருடங்கள், 1962 வரையில் வடயெமனில் ஆட்சியினை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் தமக்கான பெயரினை ~hதி பிரிவினரின் மத மற்றும் கலாசார உரிமைகளினை வென்றெடுக்க பேராடியவரும், 2004ல் அவர்களது முக்கிய மாநிலமான சதாவில் தன்னாட்சியினை ஏற்படுத்தியவருமான பதர் அல் தீன் அல் ஹ_தியின் பெயரலிருந்து பெற்றுக்கொண்டனர். 2004ல் ஹ_தி கொல்லப்பட்டதுடன், அவரினது குடும்பத்தினர்கள் கைது செய்யப்பட்டமையினால் 5 கலவரங்கள் 2010ல் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடும் வரையில் நிகழ்ந்துள்ளது.
மத்தியகிழக்கிலுள்ள வறுமைமிக்க நாடான யெமனில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இதுவரையில் 2.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 21.2 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்ப்பதாகவும்,7.4மில்லியன் மக்களுக்காக உணவுத்தேவையினை பூர்த்திசெய்ய முடியாதா நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குவைத்தில் நடைப்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாட்டுக்கு எதிர்தரப்பினர் வராமையினால் அரச தரப்பினர் மீண்டும் சவூதியினை வந்தடைந்துள்ளதுடன் சவூதியின் மீது ஐக்கிய நாடுகள் சபையானது சிறுவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டமை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், அதன் கூட்டணி தொடர்பிலும் செயலாளர் நாயகம் கண்டித்துள்ளமையானது இப்பிரச்சினையின் தீர்வு இப்போதைக்கு சந்தேகமாகவே காணப்படுகின்றது.


No comments:

Post a Comment